பழனிபாபா பேச்சு கலவரத்தை பற்றி

11-02-2018 திருமுருகப் பெருவிழா | திருச்செந்தூர் | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்சிக்கானப் பாசறை ‘வீரத்தமிழர் முன்னணி’யின் தத்துவ முழக்கத்திற்கேற்ப தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் நமது முப்பாட்டன் முருகப் பெருந்தகையின் புகழ் போற்றும் திருமுருகப் பெருவிழா 11-02-2018 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு, முப்பாட்டனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருசெந்தூரில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெருவிழா நிகழ்வுகள்: பேரணி: வேல்-காவடி ஊர்வலம் பேருந்து நிலையத்திலிருந்து 11-02-2018 பிற்பகல் 3:30 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருச்செந்தூர் கோயிலுக்குப் பெருவிழாப் பேரணியாக பறையிசை முழங்க வேலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் ஆரவாரமாக சென்று கோயிலினுள் திருமுருக வழிபாடு நடைபெற்றது. பொதுக்கூட்டம்: திருசெந்தூர் கோவில் திடலில் 11-02-2018 மாலை 4:30 மணிக்கு வீரத்தமிழர் முன்னணியின் கொடிப்பாடல் இசைக்க கொடியேற்ற நிகழ்வோடு திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் தொடங்குகியது. பறையிசை, கருப்புசாமி நாடகம்; மள்ளர் கம்பம், வேலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விடுதலைப் பாவலர் அறிவுமதி அவர்கள் எழுதிய ‘தமிழ் முருகன் வரலாறு’ (History of Thamizh Murugan) நூல் வெளியீடு நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நூலை வெளியிட ‘தமிழ்க்கடல்’ ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் பெற்றுக்கொழண்டார். அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணியின் முக்கிய நிர்வாகிகளின் கருத்துரைகள் இடம்பெற்றது. பெருவிழாப் பேருரையாற்றியவர்கள்: 1. ‘இறைநெறி’ ஐயா இமயவன், தமிழர் மெய்யியல் இலக்கியச் சொற்பொழிவாளர் 2. ‘பெருந்தச்சன்’ ஐயா தென்னன் மெய்மன், கோவில் கட்டிடக்கலை ஆய்வாளர் 3. ‘தமிழ்க்கடல்’ ஐயா நெல்லை கண்ணன், மூத்த தமிழறிஞர் – சொற்பொழிவாளர் 4. செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை : https://www.youtube.com/watch?v=dBAht7A8XMw நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2018 | Seeman 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman Amzing Speech Note: If you wish to share this video, please make sure to embed the link and share the original source. Please avoid any other methods of copying or duplicating the video, and help us support anti-piracy measures in any way you can. Thank you-Prabhakaran Kalaikkoodam